சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் பெக்கம்
இங்கிலாந்தின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து விளையாட்டுக்குழுவின் தலைவர்
டேவிட் பெக்கம் தான் சர்வதேச போட்டிகளிலிருது ஓய்வு பெறப்போவதாக
அறிவித்துள்ளார்.
இந்த
விளையாட்டு சீசனுக்கு பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறவுள்ளார்.
மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்புக்காக ஆடி தனது கால்ப்பந்து வாழ்க்கையை
தொடங்கிய டேவிட் பெக்கம் தனது அபார காற்பந்து திறமையினால், தொடர்ச்சியாக
ரியல் மாட்ரிட், எஸ்.ஏ.கேலக்ஸி, ஏ.சி.மிலான் மற்றும் மிகச்சமீபமாக பாரிஸ்
செண்ட் ஜேர்மன் போன்ற கிளப்புக்களுக்காக ஒப்பந்தம் செய்து கொண்டார். 38
வயதான பெக்கம், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கால்பந்து போட்டிகளின் உயர்
மட்டங்களில் விளையாடியிருக்கிறார்.
இவற்றை விட தனக்கு மிகப்பெரிய
பெருமை தேடித்தந்த விடயமாக இங்கிலாந்து அணிக்காக ஆடியதையும், உலக கோப்பை
கால்பந்து போட்டிகளின் போது இங்கிலாந்து அணியை வழிநடத்தியதையும்
கருதுகிறார். மேலும் நாட்டை கால்பந்து விளையாட்டுக்கு வெளியேயும்
பிரதிநிதித்துப்பத்தும், மாடலாக, சமூக ஆர்வலர்களாக, வளர்ந்து வரும் இளம்
காற்பந்துவீரர்களின் ரோல்மாடலாக பல்வேறு முனைகளில் பரிணமித்தவர் டேவிட்
பெக்கம்.
இவர் தற்போது தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்திருப்பது
அவரது ரசிகர்களிடையே ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தான்
ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என பெக்கம் கூறியுள்ளார். டேவிட்
பெக்கம் இதுவரை 115 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அது
மட்டுமின்றி 2000ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியின்
கேப்டனாக செயற்பட்டிருக்கிறார்.
இவர் 1992-2003 காலப்பகுதியில்
மேன்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக விளையாடிய 356 போட்டிகளில் 85 கோல்
அடித்தார். 60 யார்ட் தூரத்திலிருந்து இவர் அடித்த கோல் ஒன்று இன்று வரை
மேன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கு பெருமை சேர்த்து வருகிறது.
No comments:
Post a Comment