அண்மையில் வெளிவந்த மரியான் திரைப்படத்தில் இடம் பெற்ற "நெஞ்சே எழு" என்ற பாடலின் ராகத்தில், கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளத்திலிருந்து என்று அகலாமல் இருக்கும் சங்கதிக்காக என்னுடைய வரிகள். ஏதேனும் தவறிருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்.
பகைமேகம் எங்கும் சூழ்ந்தாலும்
வலியவர் நம்மை மிதித்தாலும்
குருதியால் பூமி நனைந்தாலும்
உறவுகள் கண்முன்னே மாண்டாலும்
தலைமைகள் பலரும் மறைந்தாலும்
நம் கனவு கலையாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
நிலத்தால் நாம் தனித்து அகன்றாலும்
பல நகரினில் பிரிந்து வாழ்ந்தாலும்
வெவ்வேறாய் ஆளுமை இருந்தாலும்
அடக்கியே நம்மை ஆண்டாலும்
அடிமையாய் கண்கொண்டு பார்த்தாலும்
நம் எண்ணம் அழியாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
துவளாதே பணியாதே
இனி அடிமை விளங்கு நமக்கில்லை
நீயும் நானும் என்றும் தமிழ்தாயின் பிள்ளைகளே
எந்நாளும் நம் எண்ணம் நிறைவேறும் சத்தியமே
கலங்காதே என்றும் சாதியால் உடையாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
பகைமேகம் எங்கும் சூழ்ந்தாலும்
வளியவர் நம்மை மிதித்தாலும்
தலைமைகள் பலரும் மறைந்தாலும்
நம் இலட்சியம் மாறாதே
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
துணிந்தே நில்லு
தமிழினம் என்றும் வீழ்வதில்லை
தமிழினம் என்றும் வீழ்வதில்லை தலைவா
ReplyDeleteஅருமை...
ReplyDeleteதமிழினம் என்றும் வீழாது...
வாழ்த்துக்கள்...
வலியவர் சரியா? இல்லை வளியவர் சரியா? தமிழில் சிறு சந்தேகம். கவிதை அருமை,,,, தமிழ் இனம் என்றும் வீழாது,,,,,
ReplyDeleteசரி என்றே நினைக்கிறேன்...தவறு இருந்தால் யாரவாது திருத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான்...
Deleteதமிழா தமிழா நாளும் நம் நாளே, உன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா, என்ற உணர்ச்சிமிகு பாடலில் அடுத்த வரியாக என் நாமம் இந்தியன் என்று நம்மை இந்தியத்திர்க்குள் அடைக்கும் வரிகள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் இந்த பாடல் என்று வெகு நாட்கள் ஏங்கி இருக்கிறேன். என்னுடைய ஏக்கத்தை இந்த முறை நிறைவேற்றி இருக்கிறார் செந்தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல் வரிகளை படிக்கும் தருணம் மூளை எங்கும் மின்சாரம் பாய்ந்து, உடலில் திமிர் மேய்ந்து எடுக்கிறது, ஆதங்கத்தின், வீரத்தின் வெளிப்பாடாக கண்ணீர் முட்டிக்கொண்டு நெஞ்சை கடப்பாரை கொண்டு பியர்த்து எடுக்கிறது இந்த பாடல் வரிகள். :(
ReplyDeleteஆகா...தோழரே...இது நான் எழுதிய வரிகள்.... திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் காதலை பற்றியது
Delete