இன்றைய குறள்

Tuesday, May 14, 2013

கடல் ராசா நான் பாடல் வரிகள்

படம்: மரியான்
பாடல்: கடல் ராசா நான்
பாடலாசிரியர்: தனுஷ்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா





ஆடாத கால்களும் ஆடுமையா
எங்கள் காதோரம் கடல்புரம் பாடுமையா
வங்காள கரையோரம் வாரும் ஐயா
எங்கள் பாய்மர விளையாட்டை பாரும் ஐயா

கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
இரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல்
ராசா நான் மரியேன் நான்

நெத்திலி குழம்பு வாட
எங்க நீரோடை காத்தெல்லாம் வீசுமையா
ஏய் ஒத்த மர கள்ளும் உப்பு கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோபம் கொன்ற வித்தையை காட்டும் கோமாளி தான்
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோபம் கொன்ற வித்தையை காட்டும் கோமாளி தான்

கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
இரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல்
ராசா நான் மரியேன் நான்

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின் முன்னால முன்னால
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
வெறும் புத்தி கெட்ட பாவிகளின் நடுவே
போளம்பும் என் உயிரே உயிரே

நான் ஊரு விட்டு ஊரு வந்தேன் தனியாக
இப்போ ஊனமாக சுத்துறேன அடியே
என் கூட்டமெல்லாம் ஒண்ணா சேரும் நினைப்புல
தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே

கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
கொம்பேன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்

2 comments:

  1. பாடல் வரிகளுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. awesome music ....fantastic ARR....///

    ReplyDelete

பழமொழி