இன்றைய குறள்

Thursday, December 6, 2012

கனவும் அழகு

அருமையான கனவில்,
அழகான
கவிதையாக
நீ வருவதால்,
தூக்கமும்
பிடித்துப்போனது.

கனவின் மீதும்
காதல்
ஏற்படுகிறது
எனக்கு.

நிஜத்தில் என்னை
காக்க வைத்த
நீ,
கனவில்
எனக்காக
காத்து நிற்கிறாய்

எத்தனை அழகு கனவு

மழை நின்ற பின்
விமானத்தில் ஏறி
நின்று
வானவில்லில்
வர்ணம் பூசி
மகிழ்கிறேன் நான்.

கடல் நீர்
இத்தனை சுவையா
இளநீர்
போல இனிக்கிறதே
கனவு கலந்த இனிப்பா?

மணல் வெளியிலும்
பசுமை
தோட்டங்கள்
காணும் என்
கண்கள் குளிர்கிறது

பாலையில் பூத்திருக்கும்
மலர்களை
நான் கொய்கிறேன்
என்னவளுக்காக

பண்டம் மாற்றி கொள்ளும்
சங்ககாலமும்
கனவில் அரங்கேறிய
மாயம் என்ன

சாகாவரம் என்பது
இதுதானா
கற்காலம் துவங்கி
அரசர் காலம் வாழ்ந்து
இன்றைய அரசியல்வாதிகள்
காலம் வரை
பார்த்துவிட்டேன்.

எந்த நாட்டிற்கும்
இடையே
எல்லை கோடுகளே
இல்லை

அனைத்தையும் அழித்த
பெருமை என் கனவிற்கே

ஆம் கனவு அழகு தான். 

3 comments:

  1. சாகாவரம் என்பது
    இதுதானா
    கற்காலம் துவங்கி
    அரசர் காலம் வாழ்ந்து
    இன்றைய அரசியல்வாதிகள்
    காலம் வரை
    பார்த்துவிட்டேன்.

    எந்த நாட்டிற்கும்
    இடையே
    எல்லை கோடுகளே
    இல்லை

    அனைத்தையும் அழித்த
    பெருமை என் கனவிற்கே

    ஆம் கனவு அழகு தான்.//


    மனங்கவர்ந்த வரிகள்
    ஆழமான அழ்ழுத்தமான சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. /நிஜத்தில் என்னை
    காக்க வைத்த
    நீ,
    கனவில்
    எனக்காக
    காத்து நிற்கிறாய்
    / அழகான கவிதை அருமையான வரிகள்.

    ReplyDelete

பழமொழி