அதிமேதாவிகள்
செய்தியை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
உண்மையில் வருத்தம் தெரிவிக்கும் செய்தி. கருவில் இறந்த குழந்தையை நீக்குமாறு அயர்லாந்து நாட்டில் வசித்த இந்திய பெண்மணி (அவரும் ஒரு மருத்துவர்) கோரிக்கை விடுத்தும், அரசாங்க விதிமுறை என்றும், மேலும் குழந்தை உயிரோடு இருக்கிறது அதனால் செய்ய முடியாது என்று சொல்லி நிராகரித்ததின் பலன் அக்கருவை சுமந்த பெண் இறந்துவிட்டார். இந்நேரத்தில் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள் நாம் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
உடனடியாக வடஇந்தியாவில் புது டில்லியில் உள்ள அயர்லாந்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் வடஇந்தியர்கள். அதன் வெளிப்பாடு, இந்திய அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு, அறிபறியாக வேலை நடத்தி இதை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அயர்லாந்து தூதரகத்திற்கு, கோரிக்கை விடுத்தது. அருமை. பெருமைப்படுகிறோம்.
இத்தனை துரிதமாக செயல்படும் இந்திய அரசாங்கம், நம் தமிழக மீனவர்கள் நிறைய பேர் கொல்லப்படும் பொழுது ஏன் அமைதி காத்தது?! நாம் செய்யாத போராட்டமா? எத்தனை அறப்போராட்டங்கள் தமிழகத்தின் கட்சிகள் சார்பாக, பொதுமக்கள் சார்பாக, மீனவர்கள் சார்பாக? அப்பொழுது இந்திய அரசாங்கம் ஏன் அமைதியாக இருந்தது? என்ற கேள்வி இப்பொழுது எனக்குள் ஏழுகிறது!
சில அதிமேதாவிகள், "முடிவு எடுத்தாலும் குற்றம், எடுக்கவில்லை என்றாலும் குற்றம்" என்று கேட்கக்கூடும்! அவர்களுக்கு, சரி ஒரு உயிருக்கு முடிவு எடுத்தாகிவிட்டது. இனி மேல் எங்கள் மீனவர்கள் தாக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பாட்டலோ "நீங்கள் பொறுப்பேற்று கொள்கின்றீர்களா?" என்று பதில் கேள்வி வரும்.
இது ஒன்றும் புதிதல்ல நமக்கு. ஆஸ்திரேலியாவில் வடஇந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட பொழுது இதே போல் தான் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய வெளியுலகத்துறை மந்திரி ஆஸ்திரேலியா சென்று பேசிவிட்டு வந்தார். அதன் பிறகு தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் துன்புருத்தப்படவில்லையா? தோழர்களே, இந்த கேள்வியை உங்களுக்குள் கேட்டுகொள்ளுங்கள் "தமிழக தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் இல்லையா?" "தமிழ்நாடு இந்திய வரைபடத்தில் இல்லையா?" "அது என்ன தனித்தீவாக கடலினுள் இருக்கிறதா?"
வடஇந்தியர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் இத்தனை வேகமாக செயல்படும் இந்திய அரசாங்கம் ஏன் தமிழர்களின் குறை தீர்க்கக் ஓர் அடிகூட எடுத்துவைப்பதில்லை? எனக்கு இந்நேரத்தில் மேலும் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. பிரான்ஸ் நாடு சீக்கியர்கள் தலையில் மயிர்வைத்து முண்டாசு (டர்பன்) கட்டக்கூடாது என்று விதிவிதித்த பொழுது அருமை பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள், நேரடியாக சென்று பேசி முடித்து வந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உறவுகளே. உங்கள் ஆட்களின் மயிர் என்றால் அது உயிர் போன்று. ஆனால் எங்கள் தமிழர்களின் உயிர் என்றால் அது மயிரா?

என்ன கொடுமை இது உறவுகளே?!?!?!?!?!
வேதனை தரும் சம்பவம்... அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteவருந்தி சிந்தித்துத்து தெளிவுபெறவேண்டிய செய்தி
ReplyDelete