இன்றைய குறள்

Monday, July 23, 2012

வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்

=====================================
படம்: நான் ஈ
பாடல்: வீசும் வெளிச்சத்திலே
இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல் : கார்த்திக், சாஹிதி
=====================================



வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே

கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

2 comments:

  1. பாடல் வரிகளை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி.
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிப்பு தோழரே.... கருத்து தெரிவித்து இருக்கிறேன்.

      Delete

பழமொழி