
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடந்த யூரோ கால்பந்து திருவிழாவின் இறுதி போட்டி நடப்பு வாகையர் பட்டத்தை தக்க வைக்க ஸ்பெயின் அணியும், இந்த கோப்பையை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தாலி அணியும் பலப்பரீட்சை செய்ய தயாராக உள்ளது.
ஆட்டம் துவங்கி முதல் 10 நிமிட ஆட்டம் ஸ்பெயினின் ஆதிக்கமே இருந்தது. போர்ச்சுகளிடம் செய்த தவறை செய்யக்கூடாது என்ற முடிவில் விளையாடியது போல் இருந்தது. பந்தை தன் வசம் வைத்துக் கொள்வது தான் ஸ்பெயினின் திறமை. அதை இந்த ஆட்டத்தில் கடைப்பிடித்து விளையாடியது. சரியான தருணத்தை எதிர்பார்த்து இருந்தது. அதே போல் இத்தாலி அணியின் தடுப்புகள வீரர்களின் அரணை உடைத்து அருமையான வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொண்டனர் ஜாவி மற்றும் பாப்ரிகாஸ். காப்பாளர் கட்டத்தின் விளிம்பில் அருமையாக பந்தை பாப்ரிகாஸ் வழங்க ஜாவிக்கு நேரே இருந்த இலக்கினுள் அடித்தார். பந்தை தடுக்க எகிறிய புப்பான் பிடிக்க தவறினார். ஆனால் ஜாவி அடித்த பந்து இலக்கு கம்பிக்கு சற்று மேலே சென்றது.
இத்தாலி இந்த தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள், மறுபடியும் ஒரே அணியாக பந்தை ஒருவருகு ஒருவர் அருமையாக வழங்கியபடி ஸ்பெயின் வீரர்கள் விரைந்தனர்.அப்பொழுது தனக்கு வழங்கப்பட்ட பந்தை இத்தாலியின் இலக்கின் இடது பக்கத்தில் இருந்து விரைந்து சென்றார் பாப்ரிகாஸ். அப்பொழுது பந்தை இலக்கிற்கு நேராக இருந்த டேவிட் சில்வாவுக்கு வழங்க அவர் நேர்த்தியான முறையில் தலையினுள் முட்டி இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதன் பிறகு இத்தாலி அணி எப்படியாவது சமநிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்புடன் விளையாட தொடங்கியது. அவர்களுக்கு கிடைத்த corner-kickஐ பயன் படுத்தி இலக்கினுள் அடிக்க முயன்றது. ஆனால் இயலவில்லை.
மீண்டும் தன் வசம் பந்தை கொண்டு வந்தது ஸ்பெயின்.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் ஸ்பெயின் காப்பாளர் கட்டத்தினுள் வழங்கப்பட்ட பந்தை பாலடேலி தலையால் முட்டி போடா முயற்சி செய்தார். ஆனால் காசியாஸ் அருமையான முறையில் எக்கி தடுத்தார்.
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் கசானோ காப்பாளர் கட்டத்திற்கு வெளியே தனக்கு கிடைத்த பந்தை இலக்கு நோக்கி வேகமாக உதைத்தார். அருமையான முறையில் தன்னுடைய இடது பக்கத்தில் வீழ்ந்து தடுத்தார்.
ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பந்தை அருமையான முறையில் எடுத்த சென்ற ஜாவி தடுப்பு கள வீரர்களை கடந்து செல்லுமாறு பந்தை ஜோர்டி அல்பாவிடம் கொடுக்க, தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் இலக்கினுள் அடித்தார். இது அவர் தன்னுடைய நாட்டிற்காக அடித்த முதல் இலக்கு. இதன் மூலம் ஸ்பெயின் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
மறுபடியும் இத்தாலியின் கசானோ மீண்டும் காப்பாளர் கட்டத்தின் வெளியே இருந்து அருமையான முறையில் இலக்கு நோக்கி அடித்தார். ஆனால் விழிப்பாக இருந்த ஸ்பெயின் காப்பாளர் காசியாஸ் சிறப்பான முறையில் தடுத்தார்.
ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் மீண்டும் ஒரு முயற்சி, தனக்கு கிடைத்த பந்தை எடுத்துக்கொண்டு இலக்கு நோக்கி விரைந்தார் இனியாஸ்டா. அப்பொழுது இத்தாலியின் தடுப்புகள வீரர் அவரை இடறி வீழ செய்தார்.
ஆட்டத்தின் முதல் பாதியில் கடைசி நொடிகளில் மீண்டும் டேவிட் சில்வா காப்பாளர் கட்டத்தின் வெளியே இருந்து அடித்த பந்து நேராக புப்போன் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி பாதி முடிவடைந்தது, அதில் ஸ்பெயின் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதி தொடக்கத்தில் பாப்ரிகாஸின் அருமையான ஆட்டம். இத்தாலியின் தடுப்பு கள வீரர்களை கடந்து பந்தை நேர்த்தியான முறையில் அடிக்க முயன்று இடறி விழுந்தார். அந்த பந்தை சறுக்கி வந்து அடிக்க இனியாஸ்டா முயன்றார். ஆனால் புப்போன் முன்னேறி வந்து அதை பிடித்தார்.
இதை தொடர்ந்து ஸ்பெயினின் காப்பாளர் கட்டத்தினுள் டி-நட்டாலேவுக்கு வழங்கப்பட்ட பந்தை, அவர் அருமையான முறையில் திரும்பி இலக்கினுள் அடித்தார். அதை காசியாஸ் சிறப்பாக தடுத்தார். இந்த முறை பிர்லோ, ஸ்பெயினின் தடுப்புகள வீரர்களை பந்து கடந்துசெல்லுமாறு ஸ்பெயினின் காப்பாளர் கட்டத்தினுள் உதைத்தார். ஆனால் டி-நட்டாலே வேகமாக செல்லவில்லை. காசியாஸ் முன்னேறி வந்து பந்தை பிடித்தார்.
ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் டி-நட்டாலேவை இடறி வீழ செய்ததால் ஸ்பெயினின் இடது பக்கத்தில் இருந்து கிடைத்த free-kickஐ பிர்ல்லோ, காப்பாளர் கட்டத்தினுல் எத்தினார். மீண்டும் காசியாஸ் கைகளால் குத்தி வெளியே தள்ளிவிட்டார்.
இத்தாலி வீரர் ஒருவர் தசை பிடிப்பு காரணமாக வெளியானர். ஆனால் மூன்று மாற்று வீரர்களை களம் இறக்கிவிட்டதால், இத்தாலி கடைசி வரை 10வீரர்களுடன் மட்டும் தான் விளையாடவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர்.
பந்து முழுவதும் ஸ்பெயினின் கட்டுப்பாடில் இருந்தது. ஸ்பெயின் இன்னமும் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தனர். ஸ்பெயின் பந்தை இத்தாலியின் காபாளார் கட்டத்தினுள் எடுத்த சென்று முயற்சி செய்வதும் இத்தாலி வீரர்கள் அதை தடுப்பதும் போன்ற ஆட்டத்ன்கள் நடந்தது. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் இத்தாலியின் தடுப்பு வீரர்களை கடந்து இத்தாலியின் இலக்கின் வலது புறத்தில் இருந்து பந்தை உள்ளே அடிக்க அது தடுக்கப்பட்டது. இப்பொழுது ஆட்டம் கடைசி 20 நிமிடங்களில் வந்தது.
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் இனியாஸ்ட்டா காப்பாளர் கட்டத்தினுள் புகுந்து இலக்கினுள் அடிக்க முயன்றார் ஆனால் பிர்லோவின் காலில் பட்டு பந்து வெளியானது. ஸ்பெயினின் ஆத்திக்கமே முழுதும் காணப்படுகிறது. இதிலும் இத்தாலி வீரர்கள் 10 வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.
மீண்டும் ஒரு அருமையான முயற்சி பெட்ரோ, இனியாஸ்டா மூலமாக நடந்தது. அப்பொழுது பெட்ரோ offsideஇல் இருந்ததால் அந்த முயற்சி வீணானது. அடுத்த நிமிடத்தில் அருமையாக மாற்று வீரராக களமிறங்கிய ஸ்பெயினின் டோர்றேசிடம் வழங்க, அது தடுப்புகள வீரர்களால் முறியடிக்கப்பட்டது. யூரோ இறுதி ஆட்டத்தில் 1962ஆம் வருடத்தில், சோவியத் யூனியனுக்கு எதிராக ஜெர்மனி, யூரோ இறுதி போட்டியில் 3 இலக்குகள் அடித்தது. அதன் பிறகு யாரும் அடிக்கவில்லை. இந்த முறை ஸ்பெயினுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. அதை பயன்படுத்தி ஸ்பெயின் 3 இலக்குகள் அடிக்குமா என்பது தெரிய இன்னமும் 10நிமிடத்தில் தெரியும்.
ஆட்டம் முடிய 7நிமிடம் இருக்கும் நேரத்தில் தனக்கு கிடைத்த பந்தை நேர்த்தியான முறையில் இலக்கினுள் அடித்தார் டோரஸ். இதன் மூலம் ஸ்பெயின் யூரோ 2012 கோப்பையை வெல்வது உறுதியாகிவிட்டது. தொடர்ச்சியாக இரண்டு முறை யூரோ கோப்பையை வெல்வது ஸ்பெயின் அணி மட்டுமே. ஸ்பெயின் தொடர்ச்சியாக யூரோ 2008, உலகக்கோப்பை 2012 மற்றும் யூரோ 2012 என்று மூன்று வெற்றிகள் மூலமாக ஹாட்ரிக் வெற்றியை பெறுகிறது
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த மாட்டாவுக்கு டோரஸ் வழங்க மேலும் ஒரு இலக்கு மாட்டா மூலம் அடிக்கப்பட்டது. இதன் மூலம் ஸ்பெயின் 4-0 என்ற கணக்கில் யூரோ 2012 இறுதி ஆட்டத்தில் முன்னிலை வகிக்கிறது.
E vs I 4-0 by futbolsapiens
நிச்சயமாக இந்த காலத்தை ஸ்பெயின் கால்பந்து காலத்தில் பொற்காலம் என்றே சொல்லவேண்டும். தொடர்ச்சியாக 2 யூரோ பட்டங்கள் மற்றும் ஒரு உலககோப்பை.
இத்துடன் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஸ்பெயின் தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றியது. எந்த அணியும் செய்யாத சாதனை இது. தொடர்ச்சியாக மூன்று கோப்பைகளை வென்றது ஸ்பெயின் அணி இந்த சாதனையை பெற்றது. மேலும் யூரோ இறுதி ஆட்டத்தில் அடித்த இந்த 4 இலக்குகளே அதிகப்பட்சமான இலக்குகள்.
No comments:
Post a Comment