இன்றைய குறள்

Wednesday, June 20, 2012

யூரோ 2012 பிரிவு 4கில் கடைசி சுற்று போட்டி: காலிறுதிக்கு தகுதி பெற்றது?



உக்ரேன் எதிராக இங்கிலாந்து
ஸ்வீடன் எதிராக பிரான்ஸ்

பிரிவு 4இல் இங்கிலாந்தும், பிரான்சும் தலா ஒரு போட்டியில் வென்றும் ஒரு போட்டியை சமன் செய்தும் 4 புள்ளிகள் பெற்று உள்ளன. உக்ரேன் ஒரு போட்டியில் தோல்வியடைந்த போதிலும் ஒரு போட்டியில் வெற்றிபெற்று 3 புள்ளிகள் பெற்றும் நடந்த இரு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் கடைசி இடத்திலும் ஸ்வீடன் அணியும் உள்ளது. ஸ்வீடன் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் காலிறுதிக்கு தகுதி பெறாது என்பது தெரிந்த சங்கதி. இருந்தாலும் இந்த தொடரில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் ஆடலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. அது பிரான்சை எளிதாக வெற்றியடைய வைக்காது என்று நம்பிக்கை இருக்கிறது.

இது வரை காயம் காரணமாக ஓய்வில் இருந்த இங்கிலாந்தின் நட்சத்திரம் ரூனி விளையாடுவது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறது. இருந்தாலும் சொந்த மண்ணில் உக்ரேன் விளையாடுவது அந்த அணிக்கு சற்று கூடுதல் பலமாக இருக்கும். இருந்த போதிலும் இங்கிலாந்து இந்த ஆட்டத்தை சமன் செய்தாலே காலிறுதிக்குள் நுழையலாம். தோல்வி அடைந்தால் சற்று சிரமம் தான்.

இங்கிலாந்து உக்ரேன் அணிகளுக்கு எதிரான போட்டி ஒரு வேலை சமநிலையில் முடிந்தால் பிரான்ஸ் ஸ்வீடனிடம் சமன் செய்தாலே காலிறுதிக்குள் நுழையலாம்.



இங்கிலாந்து எதிராக உக்ரேன்

ஆட்டம் துவங்கி ஐந்து நிமிடத்தில் விறுவிறுப்பு இல்லை. ஆனால் ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் உக்ரேனின் கார்மாஷ் இங்கிலாந் காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து இலக்கு நோக்கி அடித்தார். அதை தடுக்க இங்கிலாந்தின் அரண் ஜான் தெரி முயற்சி செய்ய, அவரிடம் பந்து சிக்காமால் சென்றது. பந்து இலக்கின் கம்பிக்கு சற்று வெளியே சென்றது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஒரு corner-kick கிடைத்தது, அதை ஜெரார்ட் அடிக்க உக்ரேன் காப்பாளர் முன்னே வந்து கையால் குத்தி வெளியே அனுப்பினார். ஆட்டத்தில் பந்து உக்ரேன் வசம் தான் இருந்தது; 22வது நிமிடத்தில் குட்ஷேவ் அடித்த பந்து சற்று உயரமாக சென்றது, இங்கிலாந்தின் காப்பாளர் முயற்சி செய்தார், அவருடைய கையில் படாமல் இலக்கு கம்பிக்கு சற்று மேலே சென்றது. இங்கிலாந்து வீரர்கள் பந்தை வேகமாக உக்ரேன் இலக்கு பக்கம் எடுத்து சென்றனர். உக்ரேன் வீரர் செய்த பிழையால் அவர்களுக்கு உக்ரேன் காப்பாளரின் இடது பக்கத்தில் இருந்து பந்தை சிரமம் இல்லாமல் எத்த வாய்ப்பு கிடைத்தது. அருமையாக ஜெரார்டு எத்த பந்து பறந்து உக்ரேனின் காப்பாளர் கட்டத்துக்குள் வர, அதை தலையால் முட்டி அடிக்க ரூனி முயன்றார். ஆனால் முடியவில்லை. அது உக்ரேனின் தடுப்பு கள வீரரின் காலில் பட்டு வெளியே சென்றது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ரூனிக்கு அருமையான பந்து தவழ்ந்து வந்தது. தனியாக இருந்த ரூனி தலையால் முட்டி இலக்கு அடிக்க முயன்றார் ஆனால் பந்து வெளியே சென்றது. இது ஒரு அருமையான வாய்ப்பு. அதை ரூனி தவரவிட்டுவிடார் என்றே சொல்லவேண்டும். இங்கிலாந்தின் தடுப்பு அரணை ஊடுருவி உள்ளே சென்ற உக்ரேன் வீரர் அடித்த பந்து இங்கிலாந்து காப்பாளரின் வலது பக்கத்தில் இருந்து உள்ளே நுழையும் தருவாயில் அவர் தாவி வீழ்ந்து தடுத்தார். ஐயர்மொலாண்டோ அருமையாக இங்கிலாந்தின் தடுப்பு கள வீரர்களை வெட்டி கடந்தார். கிட்டத்தட்ட பந்தை இலக்கை நோக்கி உதைக்க முயலும் பொழுது லெஸ்காட் அருமையாக வெளியே உதைத்தார். நிச்சயம் உக்ரேன் இலக்கு அடித்து இருக்கும். இத்தோடு முதல் பாதி 0-0 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.

இரண்டாம் பாதி 48வது நிமிடத்தில், இங்கிலாந்து வீரர் ஜெரார்ட் இலக்கின் பக்கவாட்டில் இருந்து அடித பந்தை வேல்பேக் இலேசாக காலில் தட்ட, அதை பிடிக்க முயன்ற காப்பாளரின் முட்டியில் பட்டு மேலே எழும்ப, அதற்கென்று தயாராக இருந்த ரூனி தலையால் முட்டி இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைகித்தது. உக்ரேன் அணி வீரர் ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் இங்கிலாந்து காப்பாளர் கட்டத்துக்கு இடப்புறம் இருந்து நேர்த்தியாக உதைத்தார். பந்து இலக்கினுள் நுழைய முயலும் பொழுது இங்கிலாந் காப்பாளர் ஹார்ட் அருமையான முறையில் மேலே எழும்பி வெளியே தள்ளிவிட்டார். அதன் உக்ரேன் தனக்கு மூலம் கிடைத்த corner-kickஐ பயன்படுத்தி எத்த, பந்து காப்பாளர் கட்டத்துக்கு வெள்யே செல்ல, இங்கிலாந்து வீரர் விழுந்து உதைத்தார். அது நேராக ரூனியிடம் செல்ல அவர் உக்ரேனின் இலக்கு நோக்கி விரைந்தார். அவருக்கு பின்னால் 3 உக்ரேன் வீரர்கள் துரத்தியபடி சென்றனர். ரூனி காப்பாளர் கட்டத்துக்குள் நுழைய மிக வேகமாக உக்ரேன் தடுப்புகள வீரர் அவரை இலக்கு நோக்கி அடிக்க விடாமல் பார்த்து கொண்டார். அவரிடம் இருந்து பந்தை வெட்டி பின்னல் இருந்த மிள்னருக்கு கொடுக்க, அவர் வேகமாக இலக்கு நோக்கி அடித்தார். அது உக்ரேனின் ஒரு தடுப்பு வீரர் மேல் பட்டு வெளியானது. உகிரேனுக்கு மிக மிக அருமையான வாய்ப்பு 62வது நிமிடத்தில் கிடைத்தது. உக்ரேன் வீரர் நேர்த்தியான முறையில் இங்கிலாந்தின் தடுப்புகள வீரரை வெட்டி இங்கிலாந்து காப்பாலரை தவிர்த்து பந்தை உதைக்க, பந்து இலக்கினுள் புஞ்தது. இங்கிலாந்து வீரர் ஜான் தெரி பறந்து அந்த பந்தை வெளியே உதைத்தார். ஆனால் இது இலக்கு கோட்டை கடந்துவிட்டது. ஆனால் நடுவர் இதை இலக்கு என்று அறிவிக்கவில்லை. மேலும் ஒரு வாய்ப்பு உக்ரேன் வீரர் டேவிச் மூலமாக கிடைத்தது. அவர் பந்தை காப்பாளர் கட்டத்துக்குள் இருந்து உதைக்க முயன்ற பொழுது ஆஷிலி கோள் வெளியே உதைத்தார். இங்கிலாந்தின் மில்னர் பந்தை உக்ரேன் காப்பாளரின் இடப்பக்கம் இருந்து எத்த, உக்ரேன் காப்பாளர் முன்னேறி வந்து கையால் தடுத்தார். அந்த பந்து நேரடியாக ஆஷிலி கோளிடம் செல்ல, அவர் அருமையாக இலக்கை நோக்கி உதைத்தார். அதை உக்ரேன் காப்பாளர் நேர்த்தியான முறையில் தாவி தடுத்தார். ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் உக்ரேனின் நட்சத்திர வீரர் சுவச்சங்கோ களமிறங்கினார். ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் மிக மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. உக்ரேன் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு நுழைய முடியும் என்ற காரணத்தால் கடுமையாக போராடியது. கடைசி சில நிமிடங்கல், இந்த நேரத்தில் இங்கிலாந்தின் காப்பாளர் கட்டத்துக்குள் கிடைத்தை பந்தை ஐயர்மொலேங்கோ சற்று வெளியே அடித்தார். இங்கிலாந் இரசிகர்கள் ஆட்டம் போட துவங்கினர். அவர்கள் காலிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. உக்ரேன் இந்த தொடரில் இருந்து வெளியானது. இங்கிலாந்து 1-0 என்ற வெற்றியால் காலிறுதிக்குள் நுழைந்தது.




ஸ்வீடன் எதிராக பிரான்ஸ்

ஆட்டம் துவக்கத்திலேயே பரபரப்பாக துவங்கியது. ஸ்வீடன் தாக்குதலை தொடர்ந்தனர். பிரான்சின் இலக்கு நோக்கி பந்துடன் விரைந்தனர். ஆட்டத்தின் மூன்றாம் நிமிடத்தில் பந்தை பிரான்சின் காப்பாளர் கட்டத்துக்குள் அடிக்க அதை தலையால் முட்டி இலக்காக முயற்சி செய்து அது பிரான்ஸ் காப்பாளரிடம் தஞ்சம் புகுந்தது. ஒரு இலக்கு அடிக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் பிரான்சின் பென்சமா தடுப்புகள வீரர்களிடம் இருந்து பந்தை கடத்தி ரிபேறியிடம் கொடுக்க, அவரும் அருமையான முறையில் உத்தைத்தார். ஸ்வீடன் காப்பாளர் மிக மிக அற்புதமான முறையில் பந்தை தடுத்து இலக்கினுள் நுழையாமல் பார்த்துக்கொண்டார். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அவர் பிரான்ஸ் காப்பாளரிடம் இருந்து பந்தை வெட்டினார். அப்பொழுது இலக்கை பாதுகாக்க யாரும் இல்லை. அவர் அருமையான முறையில் பந்தை உதைக்க அது இலக்கின் கம்பியில் அடித்து வெளியானது.
இது ஸ்வீடனுக்கு கிடைத்த மிக மிக அருமையான வாய்ப்பு என்று கூறலாம். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் பிரான்சின் பேன்-அர்பா காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து வேகமாக அடித்த பந்து இலக்கு கம்பிக்கு சற்று மேலே சென்றது. இது ஒரு அருமையான முயற்சி. இந்த ஆட்டமும் முதல் பாதியில் 0-0 என்று சமநிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதியில் 54வது நிமிடத்தில் பக்கவாட்டில் இருந்து பறந்து வந்த பந்தை ஸ்வீடனின் நட்சத்திர வீரர் இப்ராஹிமொவிச் கீழே சாய்ந்து சிறப்பான முறையில் இலக்கை நோக்கி அடித்தார். பிரான்ஸ் காப்பாலரால் அதை தடுக்கமுடியவில்லை. இதன் மூலம் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைகித்தது. நசிரி 64வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து அடித்த பந்து வேகமாக இலக்கிற்கு வெளியே சென்றது. ம-வில்லா 70வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பந்தை வேகமாக உத்தைத்தார், அதை ஸ்வீடன் காப்பாளர் அருமையான முறையில் தடுத்தார். நசிரி 76வது நிமிடத்தில் கொடுத்த பந்தை பிரான்ஸ் வீரர் அடிக்க முயலும் பொழுது மெல்பர்க் அருமையான முறையில் கீழே தவழ்ந்து அடிக்கவிடாமல் செய்தார். ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள். பிரான்சின் முயற்சிகளும் இதை போலவே வீணாகியது. ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் அடித்த பந்து தரையில் பட்டு இலக்கின் மேல் கம்பியில் பட்டு வெளியானது அருகில் இருந்த லார்சன் அதை லாவகமாக இலக்கினுள் அடித்து 2-0 என்று முன்னேற வைத்தார். இந்த ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் காலிறுதிக்கு நுழையவில்லை. இது அந்த அணிக்கு கிடைத்த ஒரு ஆறுதல் வெற்றி.

யூரோ 2012 பிரிவு டி(4)இல் இடம் பெற்ற அணிகளின் புள்ளி விவரங்கள்.

இங்கிலாந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஒரு ஆட்டத்தில் சமநிலை பெற்று 7புள்ளிகளோடு முதல் இடத்தையும், பிரான்ஸ் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றும் ஒரு ஆட்டத்தை சமன் செய்தும் 4 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தையும் பெற்று காலிறுதிக்கு நுழைந்தன. உக்ரேன் மற்றும் ஸ்வீடன் அணிகள் தலா ஒரு ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலமாக 3 புள்ளிகள் பெற்றன. இவன் இரண்டும் இந்த தொடரை விட்டு வெளியாகின.

No comments:

Post a Comment

பழமொழி