அகன்று இருக்கும் நீ
ஆயிரம் அதிசயங்களை உன்னுள் வைத்து
இறுமாப்போடு இரைகிறாய்!
ஈகையோடு உயிர்களை
உன்னுள் சுமக்கிறாய்
ஊகிக்கமுடியா பொக்கிஷம் நீ
என வியப்போடு பார்த்தேன்
ஏங்கினேன் என் கால் பட
ஐயத்தொடு தான் நெருங்கினேன்
ஒட்டிக்கொண்ட நுரைகளை துடைக்க
ஓடி போனேன் என் அன்னையிடம்.
அது அறியாவயது.
இன்றோ ஒரு வெறுப்பு
எங்கள் மொத்த கடலோரங்களையும்
சுருட்டி விழுங்கினாய்.
நீ ஏன் உவர்க்கிறாய்
என்று காரணம் புரிகிறது.
ஒவ்வொரு சொட்டும் கண்ணீர்த்துளிகளோ!
அன்றைய கண்ணகி இன்று
இருந்தால் நீ சிவந்திருப்பாய்!
No comments:
Post a Comment