தக தக தகவென தாளம் போடு - மக்கள்
சக்தியைப் பார்த்து நீ மேளம் போடு!
பச்சைத் துண்டைக் கட்டியவன் மேல - ஏய்
குண்டாஸ் போட்டவன் ஆட்சியைப் பாரு!
விவசாயி மேல குண்டாஸ் சட்டம்
விடியல்னு சொன்னது வெறும் நாடகம்!
தூய்மைப் பணியாளர் பணி நிரந்தரம் - அது
காற்றில் பறந்த வெறும் காகிதம்!
டாஸ்மாக்கில் பத்து ரூபாய் கூடுதல் - ஏய்
நித்தம் குடிமகன் நெஞ்சில் ஏமாற்றம்!
செவிலியர் கண்ணீரில் தேசமே வாடுது
அரசியல் கொலைகளோ நடக்குது!
கச்சத்தீவு மீட்கணும்னு கத்தினோமே - அந்தத்
தீவை மீட்க வழியைக் காணோமே!
சொன்னதைச் செய்யல... உண்மையைச் சொல்லல!
கேள்வி கேட்டா சிறைச்சாலை... இதுதான் நம்ம ஊரு நிலை!
No comments:
Post a Comment