இன்றைய குறள்

Tuesday, April 21, 2026

விழித்துக் கொள் தமிழா!

 எழுந்து வா... நிமிர்ந்து வா!

ஏமாற்றும் கூட்டம் இங்கே, விழித்து வா!

கேள்வி கேள்... உரிமை கேள்!

பொய் வாக்குக் கோட்டையைத் தகர்த்து வா!


ஏய்... தேர்தல் வருது, தேன் ஒழுகுது

வாக்குறுதி எல்லாம் காற்றில் பறக்குது!

கையெழுத்து முதல் கையெழுத்து - அந்த

நீட் விலக்கு மசோதா என்னாச்சு? பதில் சொல்லு!

பழைய பென்ஷன்... பழங்கதை ஆச்சு!

புதிய பிளான் போட்டுப் புழுதி பறக்குது!


கேஸ் சிலிண்டர் மானியம் எங்கே?

கல்விக்கடன் ரத்து அறிவிப்பு எங்கே?

வரியை ஏத்தி, விலையை ஏத்தி

ஏழை வயித்துல எரியுது தீ!

இது புரட்சிப் பாட்டு, இது மக்களோட வேட்டு

கேள்வி கேக்காம விடமாட்டோம் நாட்டுல!


விரலிலே மை... மனதிலே தீ!

மாற்றத்தைத் தேடு... உண்மையை நாடு!

விழித்துக் கொள் தமிழா!

No comments:

Post a Comment

பழமொழி