இன்றைய குறள்
Wednesday, July 2, 2025
தாலாட்டு பாட்டு - 3
Tuesday, June 17, 2025
தாலாட்டு பாட்டு - 2
அமைதியாக தூங்கவேண்டும் ;
களைப்பு தீர ஓய்வு வேண்டும்
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும்
நிம்மதியான உறக்கம் இருந்தால்
காலை பொழுது என்றும் சிறப்புறும்
இருளில் எதையோ தேடுகிறாய்
சின்ன கழுத்தை தூக்கியே, நீ
எதனை நிமிர்ந்து பார்க்கின்றாய்
களைப்பு தீர ஓய்வு வேண்டும்
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும்
நிம்மதியான உறக்கம் இருந்தால்
காலை பொழுது என்றும் சிறப்புறும்
உறக்கம் மறந்து என்னை உசுப்புகிறாய்
இரவு பொழுதினில் குலவை சத்தம்
என் காதை தைத்து எழுப்பியது
களைப்பு தீர ஓய்வு வேண்டும்
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும்
நிம்மதியான உறக்கம் இருந்தால்
காலை பொழுது என்றும் சிறப்புறும்
தூங்க வைக்க முயல்கிறேனே
குட்டி கை, காலை ஆட்டி, நீ
ஆரிராரோ தங்க மகனே
நீ மெல்ல மெல்ல விழிமூடு
உறக்கம் உன்னை ஆட்கொள்ளவே
ஆரிராரோ நானும் பாட
அரிராரோ ஆரிராரோ
ஆராரிரோ ஆரிராரோ
தாலேலோ தாலேலோ
தாலாட்டு பாட்டு - 1
Sunday, March 30, 2025
தாலாட்டு பாடல் வரிகள்
பாடகி சைந்தவி அவர்கள் பாடிய தாலாட்டு பாடல் வரிகள்
மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே, மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ
அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே, ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ
அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே, ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே, பட்டு வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ
தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ
சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே. சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ
ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா
Tuesday, November 10, 2020
கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் [பாடல் வரிகள்]
படம்: அட்டி
ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல நீ கன்னத்துல தாரியே முத்தம்
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்
நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோனி ஆட்டம்
கொலுசு கல்பு காட்டுது
வளையல் வளைச்சி போடுது
தினுசா ரெட்டசட பின்னல் கட்டி இழுக்குது
மூக்குத்தி மொறச்சி பாக்குது
ஜிமிக்கி ஆட்டம் போடுது
தளுக்கா நெத்தி பொட்டு என்ன சுட்டு தள்ளுது
கலரு மில்கு ஒயிட்டு மா
கன்னம் டியூப் லைட்டு மா
உதடு அல்வா ஸ்வீட்டு மா
மொத்தமா எனக்கு கிடைக்குமா
ஆத்த அபேஸ் பண்ணிட்டா
ஷார்ப்பா சாணா புடிச்சுட்டா
சல்பி முட்டாயத்தான் குல்பி ஐஸா ஆக்கிட்டா
ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல நீ கன்னத்துல தாரியே முத்தம்
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்
நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோனி ஆட்டம்
Saturday, April 18, 2015
மழை துளிகள் வாழ்க்கையிலே பாடல் வரிகள் [சென்னை உங்களை அன்போடு அழைக்கிறது பாடல் வரிகள்]
படம்: சென்னை உங்களை அன்போடு அழைக்கிறது
பாடல்: மழை துளிகள் வாழ்க்கையிலே
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
இசை: கேம்லின் ராஜா
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்ரா
மழை துளிகள் வாழ்க்கையிலே
நீ தான் பொழிய வைத்தாய்
பிடித்த ஒரு பேருணர்வை
நீ தான் வருடிவிட்டாய்
இவள் கொண்ட தனிமைகள் போனதே
இதுவரை நடந்தவை மாறுதே
அழுகையின் சுவடை அடித்து நொறுக்கினாய்
மழை துளிகள் வாழ்க்கையிலே
நீ தான் பொழிய வைத்தாய்
காற்றோடு ஓர் இலை போலே
போனதொரு வாழ்க்கையே
காணாத ஆனந்தம் யாவும்
காட்டுது உந்தன் பார்வையே
நேற்றோடு வாடையாவும்
வீட்டை விட்டு போனதே
ஊற்றாக உந்தன் நேசம்
ஈரப்பதம் சேர்த்ததே
நீ விடைக்கொடுக்க நான் நினைப்பிடிக்க
ஓர் பாதை விரியும்
போர் கலவரத்தில் நான் மயங்கிவிட
வா மாண்டு கிடப்போம்
பூட்டி கிடந்தேன் வாசல்... திறந்தாயடா
வாழாத வாழ்க்கை ஒன்றை
நானும் இன்று வாழ்கிறேன்
தோளோடு தோளினை சேர்ந்து
தேடல்களில் பூக்கிறேன்
பூ உதிர்ந்து விட வேர் மறந்துவிட
நீ கையில் எடுத்தாய்
யார் உடல்தனில் யார் உயிர் இருக்கும்
நம் வாழ்வு பிரியும்
வாழ்க்கை முழுதும் சேர்ந்தே
இக்கணத்தில் வாழலாம்
Tuesday, April 14, 2015
ஏன் இந்த பார்வைகள் பாடல் வரிகள் [ராஜதந்திரம் பாடல் வரிகள்]
பாடல்: ஏன் இந்த பார்வைகள்
இசை: ஜி.வி. பிரகாஷ்
பாடியவர்கள்: ஜி.வி. பிரகாஷ் & சைந்தவி
ஆண்:
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ
பெண்:
காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றா
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
ஆண்:
என்னுள்ளும் நீ ஆனாய்
என் வானும் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி
ஆண்:
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
பெண்:
வண்ணம் மாறாத ஓவியமாய்
என்னை அங்கங்கே காட்டுகிறாய்
ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்
என் பிம்பம்யாவும் பூட்டுகிறாய்
ஆண்:
பின்னே ஓடிடும் காட்சியல்லாம்
மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்
கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து
என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்
என்னை நான் காக்க வரைந்திருந்த
மாயக் கோடொன்றை நீக்குகிறாய்
இது மெய்யென்றோ பொய்யென்றோ
யோசிக்கும் முன் எந்தன் ஐயத்தைப் போக்குகிறாய்
ஆண்:
தேவையில்லாத வெட்கமெல்லாம்
நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன்
நான் ஓர் ஆண் என்ற உண்மை கண்டு
அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்
காதல் நட்புக்கு மத்தியிலே
நெஞ்சம் பெண்டூலம் ஆடுமடி
ஒட்டும் தீண்டாமல் பேசையிலே
வினாடி நின்று ஓடுமடி
பெண்:
இன்னும் ஓரிரு நொடிகளிலே
முத்தம் நான் வைக்கக்கூடுமடா
ஒ கோ கோ
என் எண்ண குட்டைக்குள்
உன் பிம்பம் வாழத்தான்
கல் ஒன்றை போட்டாயடா
பெண்:
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ
காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள்
ஓடும் பாடல் ஒன்றா
இருவர்:
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
என்னுள்ளும் நீ ஆனாய்
என் வானும் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி (ஆனாயடா)
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் பாடல் வரிகள் [இது என்ன மாயம் பாடல் வரிகள்]
இரவாக நீ நிலவாக நான் பாடல் வரிகள் [இது என்ன மாயம் பாடல் வரிகள்]
Wednesday, February 25, 2015
கண்களிலே கண்களிலே ஒரு பாடல் வரிகள் [பென்சில் பாடல் வரிகள்]
Wednesday, February 18, 2015
பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க [தொப்பி பாடல்வரிகள்]
படம்: தொப்பி
இசையமைப்பாளர்: ராம் பிரசாத் சுந்தர்
பாடியவர்: வேல்முருகன்
மலை மேல வாழ்ந்த
சனம் மனம் நொந்து வாடுதுங்க
குற்றப்பரம்பரைன்னு முத்திர குத்துனாண்டா வெள்ளைக்காரன்
அந்த முத்திரையை அழிச்சு முகமுடி கிழிச்சி
நான் ஆவேண்டா போலிஸ்காரன்
நான் ஆவேண்டா போலிஸ்காரன்
பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க
பார்லிமண்டு கூடி எங்க பாட்ட யோசிங்க
பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க
பார்லிமண்டு கூடி எங்க பாட்ட யோசிங்க
அந்த காலம் தொடங்கி நாங்க ஆதிவாசிங்க
ஆடு மாடு கூட எங்க சாதி சனம் ஆயாச்சுங்க
ஊரும் பேரும் இல்லாமலே நாங்க
ஒரு பாவமும் பாக்கலையே நீங்க
அட வாழ்க்க வேணும்மையா வாங்க
எங்க காடும் மலமேடும்
உங்க வேட்டைக்காடா ஆயிபோச்சி
தேனை எடுத்தவன் வாழ்க்க உப்பு கரிப்பதா
தினைய வெதச்சவன் வினைய தான் அறுப்பதா
காட்டு பறவைகளும் கைதிகள் ஆவதா
ஆதிவாசிகளும் அகதிகளாய் போவதா
எங்களுக்கும் நிலம் இருந்தது எல்லாம் என்னாச்சு
வெள்ளைக்காரன் கூட்டத்துக்கு பண்ண வீடாச்சு
காட்டுக்குள்ள கனிம வளம் எல்லாம் என்னாச்சு
கூட்டுக்குள அடிப்பவங்க கையில் போயாச்சு
அட நீதி நியாயம் இல்லையா
ஒரு கேள்வி கேட்க இங்க நாதி இல்லையா
நமக்கு மானம் சொரணை இல்லையா
இந்த மண்ணும் காடும் மக்கள் சொத்து
எல்லா நாளும் எங்கள் வித்து டா.........
தேனை எடுத்தவன் வாழ்க்க உப்பு கரிப்பதா
தினைய வெதச்சவன் வினைய தான் அறுப்பதா
காட்டு பறவைகளும் கைதிகள் ஆவதா
ஆதிவாசிகளும் அகதிகளாய் போவதா
எனக்கென்ன ஒரு கனவு இருக்குது
எட்டு திச வெல்லும் தினவு இருக்குது
காடு பயபுள்ள வம்சம் பிறந்தவன்
காவகாரனாய் ஆவ துடிக்கிறேன்
எங்க இன மக்கள் கண்ணு முழிக்கவும்
எங்க பரம்பர தண்ணி குடிக்கவும்
எங்க ஊரில் மிகநின்னு நிலைக்கவும்
காக்கியும் தொப்பியும் மாட்ட போறேன்
புடிச்சா புளியங்கொம்பு விடவேமாட்டேன்
விதைகள் எடுக்காம வரவேமாட்டேன்
அணிஞ்சா காக்கியும் தொப்பியும் அசரவே மாட்டேன்
அட தொட்டதெல்லாம் வெற்றி தானே வா
தேனை எடுத்தவன் வாழ்க்க உப்பு கரிப்பதா
தினைய வெதச்சவன் வினைய தான் அறுப்பதா
காட்டு பறவைகளும் கைதிகள் ஆவதா
ஆதிவாசிகளும் அகதிகளாய் போவதா
பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க
Thursday, January 1, 2015
இதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]
Monday, December 29, 2014
போகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]
இசை: இளையராஜா
பாடியவர்: உத்தரா
வரிகள்: தமிழச்சி தங்கபாண்டியன்
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அக ஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு
நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயுமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே
Thursday, December 25, 2014
கண்ணான பூமகனே பாடல் வரிகள் [தண்ணீர் தண்ணீரி பாடல் வரிகள்]
படம்: தண்ணீர் தண்ணீர்
பாடல்: கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
அன்றே இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் மக்கள் தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் அவலத்தை திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த பாடல் ஒரு சோகத்தாலாட்டு. மிக அருமையான பாடல் வரிகள் வைரமுத்து வாயிலாக நமக்கு கிடைத்துள்ளது.
Wednesday, December 24, 2014
எனை மறுபடி மறுபடி மறுபடி [நண்பேன்டா பாடல் வரிகள்]
Tuesday, December 23, 2014
குறுந்தொகை கொண்டாடும் பாடல் வரிகள் [இடம் பொருள் ஏவல் பாடல் வரிகள்]
Thursday, November 27, 2014
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]
Tuesday, November 25, 2014
தொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)
படம்: அநேகன்
பாடல்: தொடு வானம் தொடுகின்ற நேரம்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன், சக்திஸ்ரீ கோபாலன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே.வி. ஆனந்த்
ஆண்:
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கம் ஆகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
பெண்:
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
ஆண்:
வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப புதைக்கிறேன்
வலி என்றால் காதலின் வலி தான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப புதைக்கிறேன்
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
காதல் என்னைப் பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பது தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத் தேடும் வேரினைப் போல
பெண்ணே உன்ன கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டு மூடும் போது
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூனியம் ஆகுதே
பெண்:
சிறு பொழுது பிரிந்ததுக்கே
பல பொழுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி [பாடல் வரிகள் - அநேகன்]
படம்: அநேகன்
பாடல்: ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: பவதாரிணி, திப்பு
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே.வி. ஆனந்த்
பெண்:
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதன் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுத்தண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
ஆத்தாடி
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
ஆண்:
நீ மகுடத்தில் வைரக்கல்லு
நானோ மழபெஞ்ச உப்புக் கல்லு
உன்ன தொடவோ விரல் படவோ
ஒரு பொருத்தும் எனக்கேது
பெண்:
நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிபெட்டி
என்னை அடைக்க காத்துகிடக்க
உன்ன போல ஆளு ஏது
ஆண்:
ஆசைகள் இருந்தாக்கூட
மனம் மசியாது
ஆத்துல விழுந்தாக் கூட
நிழல் நனையாது
பெண்:
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது
ஆண்:
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்காளா
என் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்காளா
ஆண்:
கடிகாரம் முள்ளபோல
என்ன தினந்தோறும் சுத்திவாயா
என்ன துரத்து தூள் பறத்து
இந்த அள்ளிப்பூ கிள்ளிப்போயா
பெண்:
புளி மூட்டத்தூக்கிப் பாத்தேன்
இப்ப பூ மூட்ட தூக்கப் போறேன்
இளஞ்சிறுக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிறாக்கப்போறேன்
பெண்:
இடுப்புல கயிறா கிடக்க மனந்தான் ஏங்குதையா
கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தமையா
ஆண்:
விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே
பெண்:
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
ஆண்:
இது முதல் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுதண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா
தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே [பாடல் வரிகள் -- அநேகன்]
பாடல்: தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
பாடலாசிரியர்: கபிலன் வைரமுத்து
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கே.வி. ஆனந்த்
தெய்வங்கள் இங்கே
திரவியம் இங்கே
மழலை பேசும் மழை இங்கே
மாமலை இங்கே
மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் இங்கே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே
சாலைகள் மாறும்
பாதங்கள் மாறும்
வழித்துணை நிலவு மாறாதே
நதிக்கரை மாறும்
கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே
கலையாதே கனவே
தொலையாதே வரமே
கலையாதே கனவே
தொலையாதே வரமே





