பாடகி சைந்தவி அவர்கள் பாடிய தாலாட்டு பாடல் வரிகள்
மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே, மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ
அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே, ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ
அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே, ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே, பட்டு வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ
தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ
சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே. சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ
ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா
No comments:
Post a Comment