இன்றைய குறள்

Thursday, August 4, 2011

குழந்தை தொழிலாளர்கள்!!



பேனாவால் சரித்திர
மாற்றங்கள் செய்யவேண்டிய
கரங்கள் பட்டறைகளில்
ஓய்ந்துவிடுகின்றது.

பல சிகரங்களை
கண்டு களிக்கவேண்டிய
கண்கள் பறிக்கப்பட்டு
தெருவில் விடப்படுகிறது.

புதிதுபுதிதாய் சிந்திக்கவேண்டிய
மனங்கள் என்றும்
அடுத்தவேளை உணவுக்கு
ஏங்குகிறது.

பள்ளி கல்லூரிகளில்
பதிக்க வேண்டிய கால்தடங்கல்
கடற்கரை மணலில்
தொலைகிறது.

விளையாடி சாதனை
படைக்கவேண்டியவர்கள்
தேநீர் கடைகளில்
சிதருகின்றனர்.


இவர்களின் கனவுகள்
பெட்டிகளாய்
தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
அடைக்கப்படுகிறது.

சிறகுவிரித்து பரக்கவேண்டிய
பட்டாம்பூச்சிகள் பணத்துக்காக
உழைப்பு என்ற
கம்பிக்குள்.

No comments:

Post a Comment

பழமொழி