உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2026. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் இணைந்து நடத்தும் இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை, விறுவிறுப்பான இரண்டு நாக்அவுட் (ஒழிப்பு சுற்று) சுற்றுகள் (32 & 16) முடிந்து காலிறுதி போட்டிகளுக்கு வந்திருக்கிறது.
48 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், 12 பிரிவுகளை உருவாக்கி, லீக் போட்டிகள் முடிந்த பிறகு 16 அணிகள் வெளியேறின. அதில் முன்னாள் சாம்பியன் உருகுவே மற்றும் 2002இல் அரையிறுதி விளையாடிய தென்கொரியா அணிகள் வெளியேற்றப்பட்டன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
32 அணிகள் விளையாடிய நாக் அவுட் (ஒழிப்பு சுற்று) போட்டிகளில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி, பலம் வாய்ந்த நெதர்லாந்து, குரேஷியா, போன்ற அணிகள் வெளியாகியது.
ரவுண்ட் 32 இல், மிகுந்த பரபரப்போடு இருந்த ஆட்டங்கள்
போர்ச்சுகல் vs குரேஷியா, கடைசி 30 நிமிடங்கள் கண்களை சிமிட்டாமல், வேறு திசையில் பார்க்கவிடாமால் சென்ற ஆட்டம். மிக மிக ஆக்ரோஷமாக இரு அணிகளும் மோதின.
பெல்ஜியம் vs செனெகல், 85 நிமிடங்கள் வரை செனெகல் அணி 2-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. அதன் பிறகு 86, 89 மற்றும் 120+5 நிமிடங்களில் பெல்ஜியம் அசத்தியது.
பிரேசில் vs ஜப்பான், மிகவும் எளிமையாக பிரேசில் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையை தகர்த்தது ஜப்பான். போராடி வென்றது பிரேசில்
அர்ஜென்டினா vs காபோ வெர்டே: ஸ்பெயின், உருகுவே & சவூதி அரேபிய நாடுகளோடு பிரிவு ஆட்டத்தில் 90 நிமிடங்கள் வரை சமன் செய்து தோற்காத அணி, அர்ஜென்டினாவை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற ஆர்வம் இரசிகர்கள் மத்தியில் இருந்தது. அர்ஜென்டினாவை மொத்தமாக முடக்கி கோல் அடிக்கவிடாமல் 90நிமிடங்கள் வரை 1-1 என்று வைத்திருந்தது மிக மிக பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது .
-----------------------------------------------------------------------------------------------------------------------------
32 அணிகள் விளையாடிய நாக் அவுட் (ஒழிப்பு சுற்று) போட்டிகளில் , பலம் வாய்ந்த போர்ச்சுகல், முன்னாள் சாம்பியன் பிரேசில், பராகுவே மற்றும் கொலம்பியா போன்ற அணிகள் வெளியாகியது.
பராகுவே vs பிரான்ஸ்: பராகுவே பலமாக பிரான்ஸ் அணியை கட்டுப்படுத்தினர். அவர்களை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர். அவர்கள் செய்த தவறால் பிரான்ஸ் அணிக்கு ஒரு பெனாலிட்டி கிடைத்தது.
பிரேசில் vs நார்வே: பிரேசிலின் தோல்வி பிரேசில் இரசிகர்களின் இதான்யங்களை நொறுக்கியது. நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்து ஆறுதல் கொடுத்தார். இந்த போட்டிக்கு பிறகு அவர், தனது ஓய்வை பற்றி அறிவித்தார்.
போர்ச்சுகல் vs ஸ்பெய்ன்: இந்த ஆட்டம், சீராகவே சென்றது. கடைசி நிமிடங்கில் ஸ்பெய்ன் அடித்த கோலால் ரொனால்டோவின் இரசிகர்கள் மிகவும் உடைந்துவிட்டனர்.இது ரொனால்டோவின் கடைசி உலககோப்பையாக கூட இருக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.
அர்ஜென்டினா vs எகிப்து: எகிப்தின் வேகத்தை அர்ஜென்டினா அணி எப்படி கட்டுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. 2-0 என்ற நிலையில் முன்னிலையில் இருந்த எகிப்து அணிக்கு, கடைசி 14 நிமிடங்கள் மோசமாக அமைந்தது, நடப்பு சாம்பியன் 3-2 என்று வாகை சூடினார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
2026 உலககோப்பை கால்பந்து திருவிழாவில், 96 ஆட்டங்கள் முடிவடைந்து, 7+1 ஆட்டங்கள் மிச்சம் (மூன்றாம் இடத்திற்கான ஆட்டம்) உள்ள நிலையில், 8 அணிகள் பலபரிட்ச்சை செய்யும் இந்த காலியிறுதி போட்டிகளின் இதோ :-
பிரான்ஸ் vs மொரோக்கோ
ஸ்பெய்ன் vs பெல்ஜியம்
நார்வே vs இங்கிலாந்து
அர்ஜென்டினா vs ஸ்விட்சர்லாந்து
பொறுத்திருந்து பார்ப்போம், எந்தெந்த அணிகள் அரையிறுதி போட்டியில் மோதுகின்றன என்று.
No comments:
Post a Comment