பழையன திரும்பாதா என்ற
ஏக்கம்
உள்ளத்தினுள் பாரமாக
இருந்தாலும்,
புது முகங்கள்,
புது உறவுகள்,
புது பழக்கங்கள்,
புது நடைமுறைகள் என
அனைத்தும் புதியது.
கணவர் எனும் வாழ்க்கை துணைவர்
கண்ணை இமை காப்பது போல் பேணுகிறார்.
எனக்கு பிடித்தது போல் அழகான வீடு.
என்னுடையது இது என்று,
கர்வமாக எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
மாற்றங்களில் அழகை பார்த்தேன்
காலை கதிரவன் இத்தனை அழகா!
மாங்குயிலின் குரல் இவ்வளவு இனிமையா!
இருள் அகல விடியற்காலை அமைதியா!
நிறைய ஆச்சிரியங்கள்
என்னை காட்டிலும் நீ சுவையாக
சமைக்கிறாய் என்று என்
அன்னை என்னை புகழ்ந்தது
பிறந்து வளர்ந்த குடும்பத்தை
பிரிந்த பாரம்,
கண்களில் ஓரம்
சிதறிய கண்ணீரை
துடித்த
திருமண சொந்தம்,
வாழ்நாள் பந்தம்,
என்னுடைய அந்தம்.
=================
சில நாட்களில் மாறி விடும்... (நினைவுகளைத் தவிர)
ReplyDeleteஅருமை ஐயா!!!
ReplyDelete