இன்றைய குறள்

Tuesday, June 23, 2026

தேர்தல் எனும் கானல் நீர்



ஏக்கம் 
விரலில் நீலம் பட்டு,
மாற்றம் பிறக்கும் 
பூத்த மலர் போல் 

நம்பிக்கை 
சின்ன காகித துண்டு 
வெளிச்சம் தரும் 
இருட்டறையில் 

எண்ணம் 
பல கைகள் இணைந்து 
நாடு மாறும் 
ஒரு ஒட்டு மட்டும் 

ஏமாற்றம் 
ஐந்தாண்டுத் தூக்கம்!
விழித்துக் கொண்டது
வாக்குப்பெட்டி!

சுயநலம் அறியாமை
விலைபோனது ஓட்டு!
விலைவாசி உயர்வில்
அழுகிறான் ஏழை!

அறியா'மை'
கைதட்டித் தேர்ந்தெடுத்தான்!
கடைசியில் எஞ்சியது
வெறும் விரல் மை!

No comments:

Post a Comment

பழமொழி