இன்றைய குறள்

Friday, October 24, 2025

50000கிமீ மிதிவண்டியில் கடந்த நண்பர்களுக்காக

சில ஆண்டுகளில் பல பயணங்கள் 
பசுமை நிகழ்வுகளை நிகழ்த்தி, 
நினைவு பெட்டகத்தில் சேமித்த பயணங்கள். 

எண்ணி மகிழ்ச்சியுற பல இருக்கும். 
சவால்கள் நிறைந்திருக்கும் பயணங்கள் 
அனைத்தும் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது.

சாலைகள், மனிதர்கள், 
காடுகள், மலைகள், 
வெயில், மழை, குளிர்,
என எதிர்கொண்ட பயணங்கள் இவை.

இது வெறும் பொழுது போக்கும் பயணங்கள் அல்ல,
பேரார்வம், 
தைரியம்,
போர்குணம்,
ஒழுக்கம்,
உள்ள உறுதி, 
பெரும் இலட்சியம்
அனைத்தையும் ஒருங்கிணைத்த பயணங்கள்.

சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்!!!

ஒரு வெற்றி வீரன் இந்த தற்காலிக வெற்றியோடு நிறக்கப்போவதில்லை.
அவன் கால்கள் தினவெடுத்து காத்திருக்கிறது,
அவன் விழிகள் சவால்களை நோக்கி எதிர்கொண்டிருக்கிறது 
அடுத்தது என்ன என்ற எண்ண ஓட்டங்கள் இருக்கிறது.

அவன் இங்கு பறை சாற்றியிருப்பது ஒரே ஒரு கூற்றை,
நினைத்தால் சாதிக்கலாம் என்பதே அது.

அவனுடைய சோம்பலை அவனே தீயிட்டான், புரட்சியாளன் ஆனான் 
தட்பவெப்ப தடைகளை தகர்த்தெறிந்தான், சாதித்தான் 

அவனுக்கு முன்னோடி சிலர்,
பலருக்கு முன்னோடி அவன் 

பாதைகள் பல காத்திருக்கிறது
அவன் தடம் காண 

மீண்டும் புறப்பட்டுவிட்டான்
அடுத்த இலக்கை நோக்கி. 

வாழ்த்துகள்  






No comments:

Post a Comment

பழமொழி