இன்றைய குறள்

Sunday, November 6, 2011

ஒருங்கினைவோம்....


படம் - ரௌத்திரம்
பாடல் - மாலை மங்கும் நேரம்

இதை படிக்கும் நண்பர்கள் தயவு செய்து "ரௌத்திரம்" படத்தில் இடம் பெற்றுள்ள "மாலை மங்கும் நேரம்" பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்.




பாதை போகும் தூரம், என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில், அது நில்லாமல் ஓடும்
தடைகள் வந்தால் என்ன, வெட்டி பேச்சுகள் வந்தால் என்ன
வெற்றி இலக்கு மட்டும்தானே, மனதில் என்றும் நிற்கும்


துரோகம் என்றும் வென்றதில்லை இல்லையே,
வேரோடு அழித்து வெற்றியடைவோம்.
உறக்கம் கண்ணை அண்டுவதில்லை இல்லையே,
லட்சியம் ஈட்டும்வரை விழித்தேயிருப்போம்.

பாதை போகும் தூரம் என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில் அது நில்லாமல் ஓடும்

வீரத்திலே குறைவில்லை, பயிற்சியிலே நிறைவாக
எதிரிகளின் படையினரை ஓட செய்திடுவோம்.
வீழ்ந்தாலும் விதையாவோம்; மடிந்தாலும் உயிர்த்தெழுவோம்
என் வீரமா! உன் வீரமா! மோதி பார்த்திடுவோம்.
ஆயுதத்தை நாங்கள் தானா எடுக்கவில்லை,
ஏந்த செய்தது நீங்கள் தானே!
அதற்கு பரிசு காத்திருக்கு உங்களுக்கு,
தோல்வி பயத்தில் மண்டியிடுங்கள்.

பாதை போகும் தூரம், என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில், அது நில்லாமல் ஓடும்

நமது பூமியே தாயாக, நினைத்து நாம் வாழ்திருந்தோம்
வேறொருவன் கைபற்ற பார்க்கலாகுமா
ஊரெங்கும் குண்டுவெடிப்பு; தாய் தந்தை உயிரிழப்பு
சாலைகளிலே இரத்த ஆறு வற்றவேயில்லை
மாணவர்கள் பள்ளியினுள்ளே நுழையவில்லை
குண்டு அடித்து மாண்டுபோனார்!
கர்ப்பிணிகள் சேர்க்கப்பட்ட மருத்துவமனையும்
கருகி கருவை அழித்துபோனது!

பாதை போகும் தூரம் என் கால்கள் நில்லா ஓடும்
வெற்றியிலக்கை அடையும் வரையில் அது நில்லாமல் ஓடும்
தடைகள் வந்தால் என்ன,வெட்டி பேச்சுகள் வந்தால் என்ன
வெற்றி இலக்கு மட்டும்தானே மனதில் என்றும் நிற்கும்


பாடலாய் கேட்க இங்கே சொடுக்குங்கள் கேட்க

நன்றி

6 comments:

  1. "பாதை போகும் தூரம், என் கால்கள் நில்லா ஓடும்
    வெற்றியிலக்கை அடையும் வரையில், அது நில்லாமல் ஓடும்"

    அண்ணா இந்த வரிகள் மிகவும் அருமை

    ReplyDelete
  2. நீங்கள் உங்கள் குரலில் பாடி பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் தோழரே

    ReplyDelete
  3. தோழர் சுரேந்தர் அவர்களே, என்னுடைய குரல் வளம் உங்களுக்கு தெரியும் அல்லவா.... தெரிந்து என்னுடைய குரலில் பாட சொல்வது ஏந்த விதத்தில் நியாயம். நீங்கள் வேண்டுமானால் பாடி அனுப்புங்கள். நான் இங்கே பதிக்கிறேன்...

    ReplyDelete
  4. மூன்று தோழிகளின் குரல் சரியாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை. இருவரிடம் சொல்லிவிட்டேன். ஒருவரிடம் இன்னமும் சொல்லவில்லை. அவரை சந்திக்கவில்லை.

    ReplyDelete
  5. உதவி கேட்டு இருக்கிறேன்.....பதில் வரவில்லை.. :(

    ReplyDelete

பழமொழி